Friday, June 9, 2017

வடகொரியா கடலை நோக்கி அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இன்று வீசப்பட்ட ஏவுகணை தரையில் இருந்து கடலில் செல்லும் கப்பலை தாக்கி அழிக்கும் வகையை சேர்ந்ததாகும். கடல் பகுதியை நோக்கி அடுத்தடுத்து ஏவுகணை வீசிய வடகொரியா சியோல்: தென் கொரியா நாட்டையும்,

அதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. வடகொரியாவின அத்துமீறல் காரணமாக ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனாலும் இதை கண்டு கொள்ளாமல் வடகொரியா ராணுவ ஆயுத சோதனைகளை தொடர்கிறது.

இந்த நிலையில் இன்று வடகொரியா கடலை நோக்கி அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. வடகொரியாவின் வான்சன் நகர் பகுதியில் இருந்து இந்த ஏவுகணைகள் அனுப்பப்பட்டன. அவை 200 கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று கடலில் விழுந்தன. இன்று வீசப்பட்ட ஏவுகணை தரையில் இருந்து கடலில் செல்லும் கப்பலை தாக்கி அழிக்கும் வகையை சேர்ந்ததாகும். அமெரிக்கா மற்றும் தென் கொரியா கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் இந்த சோதனையை வட கொரியா நடத்தி இருக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer