Tuesday, June 20, 2017

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னிடம் தொலைபேசியில் உரையாடியுள்ள போதிலும், எழுத்து மூலம் இன்னமும் அறிவிக்கவில்லை” என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 16 பேர் அடங்கலாக அண்மையில் 21 மாகாண சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.

ஆயினும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற சமரச முயற்சிகளை அடுத்து, நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக இரா.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை அறிவித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் இன்று செவ்வாய்க்கிழமை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer