இளைய தளபதியுடன் ‘பத்ரி’, ஸ்ரீகாந்துடன் ‘ரோஜாகூட்டம்’, சூர்யாவுடன் ‘சில்லுன்னு ஒரு காதல்’, கார்த்தியுடன் ‘சிறுத்தை’ உள்ளிட்ட பலபடங்களில் நடித்து பிரபமானவர் நடிகை பூமிகா. பரத் கபூர் என்ற யோகா மாஸ்டரை திருமணம் செய்து கொண்டபிறகு மிகச்சிலபடங்களில் கதை நன்றாக இருந்தால் மட்டுமே நடித்து வருகிறார் பூமிகா. இது குறித்து அவரிடம் கேட்ட போது,‘ அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘எம் எஸ் டோனி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் அவரது சகோதரியாக நடித்திருந்தேன்.
அதே போல் ஹிந்தி,தெலுங்கு, தமிழ் படங்களில்ப்தற்கஆர்வமாகயிருக்கிறேன். ஆனால் படத்தின் கதை நன்றாக இருக்கவேண்டும். எனக்கு பொருத்தமானதாக இருக்கவேண்டும். அத்தகைய கேரக்டர்களை மட்டுமே தெரிவு செய்து நடித்து வருகிறேன். அந்த வகையில் தற்போது தெலுங்கில் நானி நடிக்கும் படத்தில் ஒருமுக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். இப்படத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னா ஆகியோர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்கள்.
என்னைக் கேட்டால் எனக்கு பொருந்தும் கதைகளில் 70 வயது வரை நடிக்க தயாராகவே இருக்கிறேன்.’என்றார். பூமிகாவிற்கு தற்போது 40 வயதாகிறது. இவர் இன்னும் 30 ஆண்டுகள் கலைசேவை செய்ய தயாராகயிருக்கிறாராம்.
Friday, June 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment