முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமவுரிமை இயக்கம் மற்றும் கேப்பாபுலவு மக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மூவின மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமது கோரிக்கை மனுவைக் கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
ஜனாதிபதி அலுவலகத்துக்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் வீதியில் அமர்ந்து போராடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் கொண்ட குழு தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றுள்ளது.
Tuesday, June 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment