குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார் போட்டியிடவுள்ளார்டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் ஆவார். மக்களவையின் தலைவராக பொறுப்பு வகித்த முதல் பெண் மீரா குமார் ஆவார்.
மேலும் இவர் முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளும் ஆவார். சட்டம் பயின்றுள்ள மீராகுமார், இந்திய தூதரக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.
Thursday, June 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment