யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள மயிலிட்டி கிராமம் இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ். மாவட்டத்தில் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் வசம் இருக்கின்ற காணிகள் குறித்தும் அதனை விடுவிக்க வேண்டியது குறித்தும் நாங்கள் அரசாங்கத்துடன் பேசியுள்ளளோம். பல விடயங்கள் தொடர்பில் எமக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் இரண்டு மாத காலத்துக்குள், வலிகாமம் வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற மயிலிட்டி கிராமம் விடுவிக்கப்படும் என்கிற நம்பிக்கையுண்டு.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்கப்படும்: மாவை சேனாதிராஜா
Thursday, June 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment