வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும், சமூகசேவை, மறுவாழ்வு, மகளிர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளாக காணப்பட்ட விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோர் பதவி விலகிக் கொண்ட நிலையில், அந்த அமைச்சுக்களை தற்காலிகமாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், எதிர்வரும் 3 மாதங்களுக்கு குறித்த அமைச்சுக்களுக்கு புதியவர்கள் இருவரை நியமிப்பதற்கு முதலமைச்சர் தீர்மானம் மேற்கொண்ட நிலையிலேயே, அதன் பிரகாரம் கந்தையா சர்வேஸ்வரனும், அனந்தி சசிதரனும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
எனினும், விவசாயம் மற்றும் மாகாண நீர் வளங்கல் அமைச்சுக்களை முதலமைச்சர் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழேயே தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
Sri Lanka
»
வடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம், புனர்வாழ்வு அனந்தியிடம், விவசாயம் விக்னேஸ்வரனிடம்!
Thursday, June 29, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment