தமிழில் மட்டுமல்ல... தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்த ஹிட். அவரை விட அவரது தாய்குலம்தான் இதனால் கூந்தலை அள்ளி முடிந்திருக்கிறார்.
மகளின் செல்போன் எண்ணை மாற்ற சொல்லி உத்தரவிட்டவர், அதை இன்டஸ்ட்ரியில் கொடுக்காமல் மறைத்துவிட்டதால் ஆளாளுக்கு தவித்துப் போய்விட்டார்கள். கடந்த சில நாட்களாகவே கீர்த்தி சுரேஷின் புது நம்பர் இருந்தா கொடுங்க என்று கேட்கும் மேனேஜர்களும், இயக்குனர்களும் தப்பு தப்பான நம்பர் வர... படு பயங்கர அப்செட். என் பொண்ணு நம்பர் கிடைச்சு அவ கிட்ட பேசுறதே அதிர்ஷ்டம்னு இருக்கட்டுமே என்கிறாராம் மம்மி. கொடுமை என்னவென்றால் கீர்த்தி சுரேஷின் அதிகாரபூர்வமான மேனேஜருக்கே இந்த மாற்றப்பட்ட எண் தரப்படவில்லை என்பதுதான். எதுவாயிருந்தாலும் மம்மி என்கிற கோட்பாட்டின் குறியீடுதான் இது! புரிஞ்சுக்கோங்க புதுமைபித்தன்ஸ்.
Friday, June 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment