Thursday, June 29, 2017

பிலிப்பைன்ஸின் தெற்கே உள்ள மராவி நகரில் ISIS ஆதரவுடன் போரிட்டு வரும் ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிடுவதற்காக பிலிப்பைன்ஸ் அரசுக்கு சீனா இன்று புதன்கிழமை ஆயிரக் கணக்கான ஆயுதங்களை அந்நாட்டு அதிபர்  றொட்ரிகோ டுட்டெர்ட்டேவுக்கு வழங்கியுள்ளது.

இச்செயல் பிலிப்பைன்ஸின் முன்னால் நண்பனான அமெரிக்காவுடனான நெருக்கத்தைக் குறைப்பதாகவும் பீஜிங்குடனான நெருக்கத்தை அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளது. வழங்கப் பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை துப்பாக்கிகள் மற்றும் ரைஃபிள்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பவை ஆகும். சுமார் $7.35 மில்லியன் டாலர் பெறுமதியான இந்த ஆயுத உதவி சீனாவுடனான பிலிப்பைன்ஸின் உறவின் புதிய விடியல் எனத் தான் கருதுவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் டுட்டெர்ட்டே தெரிவித்துள்ளார்.

மராவியைத் தற்போது ஆக்கிரமித்து வரும் இஸ்லாமியப் போராளிகளால் கொல்லப் பட்ட சுமார் 17 பொது மக்களது சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக டுட்டெர்ட்டே இனது அறிப்புக்கு சில மணிநேரங்களுக்கும் முன்னதாகத் தெரிய வந்துள்ளது. இப்போராளிகளை எதிர்க்க கடந்த ஒரு மாதமாக பிலிப்பைன்ஸ் படை வான் தாக்குதலின் உதவியோடும் ஆர்ட்டிலரியின் உதவியோடும் போரிட்டு வருகின்றது. இப்போரில் இதுவரை 290 போராளிகள், 70 படையினர் உட்பட 400 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் மராவியில் உள்ள கிட்டத்தட்ட 2 இலட்சம் குடிமக்கள் அங்கிருந்து வெளியேறி நகரமே சின்னா பின்னமாக்கப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை பிலிப்பைன்ஸ் அரசுக்கு 2 ஆவது தடவையாகவும் மேலதிக ஆயுதங்கள் வழங்கப் படும் என்றும் இப்போரில் பயிற்சி, புலனாய்வு உதவி மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகள் போன்ற வழிகளிலும் சீனா உதவத் தயாரக இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer