வடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற போது தடுத்துவைக்கப்பட்டு, கோமா நிலையில் அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பட்ட ஒட்டோ வார்ம்பியெர் எனும் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடகொரியாவில் தான் தங்கியிருந்த சுற்றுலா விடுதியில், அரசியல் பதாகை ஒன்றை திருட முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 15 வருடகால கடு ஊழிய சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 15 மாதங்கள் அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கோமாநிலைக்கு தள்ளப்பட்ட அம்மாணவர், வடகொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு மூளைச் சேதம் ஏற்பட்டதாகவும், இதனாலேயே அவர் உயிரிழக்க நேரிட்டதாகவும், வடகொரியா எவ்வாறான துன்புறுத்தலை அவருக்கு மேற்கொண்டது என கண்டறியப்பட வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினர் கொதித்தெழுந்துள்ளனர்.
Home
»
World News
»
வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் கோமா நிலையில் உயிரிழப்பு
Tuesday, June 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment