உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, விட்டமின்கள், தாது உப்புகள், நுண் ஊட்டச்சத்துகள் இவை அனைத்துமே மிகவும் அவசியமாகும்.
இந்த சத்துக்களின் எவையேனும் ஒன்று குறைந்தாலே, நம் உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவை, நமது உடல் கொழுப்பாக மாற்றி வைத்து கொண்டு எப்போது நம் உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறதோ, அப்போது அந்த கொழுப்பை உடைத்து, தனக்குத் தேவையான ஆற்றலை உடலே எடுத்துக் கொள்கிறது.
இந்நிலையில் தினமும் அசைவம் சாப்பிட்டு வருவதால், அதிலிருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்துக்களின் அளவு அதிகமாகி, அந்த கொழுப்புகள் அனைத்தும் நம் உடலில் தேங்கி பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
அசைவ உணவுகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்?
உடல் பருமன் அதிகமாகிறது.
உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
சர்க்கரை நோயை உண்டாக்குகிறது.
இதய நோய்கள் உருவாகிறது.
அசைவ உணவுகள் ஆபத்தை ஏற்படுத்துவது ஏன்?
அசைவத்தில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது. எனவே இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளை ஏற்பட காரணமாக அமைகிறது.
தினசரி அசைவ உணவுகள் சாப்பிடும் போது, நம் உடலில் அளவுக்கு அதிகமாகப் புரதம் சேர்கிறது. இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் அதனுடைய முழுமையான செயல்பாட்டினை இழக்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
கோழிகளின் வளர்ச்சி மற்றும் அதிக எடைக்காக ஈஸ்ட்ரோஜென் எனும் ஊசி போடப்படுகிறது. எனவே அதை சாப்பிடும் பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் பாலியல் சுரப்பைத் தூண்டி, தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
இதனால் பெண்களுக்கு இளம் வயதிலேயே பூப்பெய்துவது, சீரற்ற மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்னைகள், கர்ப்பப்பைப் புற்றுநோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
Wednesday, June 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment