போப் பிரான்சிஸ் இனது மூத்த நிதி ஆலோசகரும் வத்திக்கானின் பொருளாளரும் அவுஸ்திரேலியாவின் மூத்த கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலும் ஆன 75 வயதாகும் ஜோர்ஜ் பெல் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1970 ஆம் ஆண்டே ஒரு நீச்சல் குளத்தில் வைத்து தம்முடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக இரு ஆண்கள் ஜோர்ஜ் பெல் மீது புகார் அளித்துள்ளனர். இவ்விரு ஆண்களுக்கும் தற்போது 40 வயதுக்கு மேலாகின்றது.
மறுபுறம் 1980 ஆம் ஆண்டு 3 சிறுவர்கள் முன் ஆடைகளைக் களைந்து விட்டு நின்றதாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது. இவை தவிர மெல்பேர்னில் இவர் ஆர்ச் பிஷோப்பாக பணியாற்றிய போது உள்ளூர் மதகுருமார் மீது சுமத்தப் பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் தவறி விட்டார் என்றும் கூறப்படுகின்றது. தன் மீதான குற்றச்சாட்டுக்களைக் கடுமையாக மறுத்துள்ள ஜோர்ஜ் பெல் தானாகவே முன் வந்து போலிசாரிடம் வாக்கு மூலம் அளித்ததாகத் தெரிய வருகின்றது.
இன்று வியாழக்கிழமை மெல்பேர்னில் வைத்து ஜோர்ஜ் பெல்லின் சட்ட பிரதிநிதிகளிடம் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் கையளிக்கப் பட்டுள்ளன. மேலும் ஜூலை 18 ஆம் திகதி அவர் மெல்பேர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
Thursday, June 29, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment