Wednesday, June 14, 2017

உடல் வலி, அசதி, இடுப்பு வலி மற்றும் கைகால் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு மூலிகை குளியல் மூலம் நல்ல தீர்வினைக் காணலாம் எப்படி தெரியுமா?

மூலிகை குளியல் உபயோகிக்கும் முறை

வாதநாராயணன் இலை, நொச்சி இலை, நுணா இலை, ஆடாதோடை இலை மற்றும் புளிய இலை ஆகிய அனைத்து இலைகளிலும் இரண்டு கைப்பிடி அளவு எடுத்து நீரில் நன்கு கழுவி, பின் அது முழுவதையும் நீர் நிரம்பிய ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு இதமான சூட்டில் கொதிக்கவைக்க வேண்டும்.

பின் சூடு தாங்கும் அளவிற்கு இதமான அளவில் வந்ததும், ஒரு துணியை அந்த நீரில் நனைத்து, உடம்பில் வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் ஒத்தடம் கொடுத்து விட்டு, மீதமுள்ள நீரில் குளிக்க வேண்டும்.

இதனால் உடம்பின் வலிகள் நீங்கி புத்துணர்ச்சி மற்றும் ஒரு உற்சாக உணர்வை உணரலாம்.

இந்த மூலிகை இலைகள் முழுவதும் இல்லையெனில், கிடைத்த இலைகளை மட்டும் வைத்து பயன்படுத்தலாம்.

நன்மைகள்

ஆடாதோடை இலைகள் தசை வலிகளை போக்கி, நாட்பட்ட சளி, காய்ச்சல் மற்றும் தொண்டைப் பாதிப்புகளை குணமாக்கும் தன்மைக் கொண்டது.

வாத நாராயண இலை, அனைத்து வகையான வாதப் பிரச்சனைகள், உடல்வலி, கட்டிகள் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனையை குணமாக்கும். எனவே இந்த இலையுடன் பூண்டு சேர்த்து வேகவைத்து, உணவுடன் கலந்து சாப்பிட்டால், வாயு மற்றும் மூட்டுவலி பிரச்சனைக்கு சிறந்த தீர்வினைக் காணலாம்.

நுணா இலை அதிக வெப்பத்தை தணித்து, வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். எனவே இந்த இலையின் சாறு இடுப்புவலியை போக்கும். இதன் காய் மற்றும் கல் உப்பு சேர்த்து அரைத்து காயவைத்து பல்துலக்கி வந்தால், பற்கள் தொடர்பான பிரச்சனையை தடுக்கலாம்.

சிறந்த கிருமி நாசினியான நொச்சி இலைச்சாறு நாட்பட்ட புண்களை ஆற்றும், இலைகளை வைத்து ஒத்தடம் கொடுத்தால், சுளுக்கு விலகும், மேலும் இது முதுகுவலி, வாதம் போன்ற பிரச்சனையை குணமாக்கும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer