Saturday, June 3, 2017

நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. அத்தோடு, இவ்வாறான வெறுக்கத்தக்க செயல்களைத் தூண்டுபவர்களுக்கு எதிராக சட்டத்தினை சரியாகப் பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறுவுறுத்த வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே மேற்கண்ட விடயங்களை அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

“முஸ்லிம் சமூகத்தை மாத்திரமன்றி நாட்டின் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு உடன் பணிப்புரை விடுக்க வேண்டும்.

இதேவேளை, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, பல சொத்துக்களுக்கும் சேதமாக்கப்பட்டன. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.” என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer