அரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் நிர்வகிப்பதற்கான அனுமதியோ அங்கீகாரமோ அல்ல என்று தென்னாபிரிக்காவின் பிரதம நீதியரசர் மொசெனகோ தெரிவித்துள்ளார். சகல தரப்பினரும் சமவுரிமையுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதே அரசியலமைப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், நேற்று புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகால யுத்த சூழலில் சிக்கியிருந்த தென்னாபிரிக்கா, அதன் அரசியலமைப்பு தயாரிப்பின் போது முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து இதன்போது தென்னாபிரிக்க பிரதம நீதியரசர் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக பொதுமக்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் என சகலருடனும் கலந்துரையாடி, அரசியல் கைதிகளை விடுவித்தல், மோசமான சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்களில் போதுமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும், குற்றமிழைத்தவர்கள் அதிகாரிகளாக காணப்பட்டபோது இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு பெரும் சவால் காணப்பட்டதென்றும் தென்னாபிரிக்க பிரதம நீதியரசர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், சுமார் 4 வருட நீண்ட கலந்துரையாடலின் பின்னரே 1993ஆம் ஆண்டு தென்னாபிரிக்க இடைக்கால அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டதென குறிப்பிட்டார்.
எனவே, இவ்வாறான விடயங்களில் போதுமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு சகல தரப்பினருடைய கருத்துக்களையும் செவிமடுத்து, இறுதியாக இணங்கக்கூடிய எல்லையில் இணக்கப்பாட்டிற்கு வருவதே பொருத்தமாக அமையுமென தென்னாபிரிக்க பிரதம நீதியரசர் மேலும் குறிப்பிட்டார்.
Home
»
Sri Lanka
»
அரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் ஆள்வதற்கான அங்கீகாரம் அல்ல: தென்னாபிரிக்காவின் பிரதம நீதியரசர்
Thursday, June 29, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment