திருகோணமலை, மூதூர்- பெரியவெளி பகுதியில் சிறுமிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பெரியவெளி கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மூன்று சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் தெரிவித்து பெற்றோர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்திய போதே மூதூர் நீதவான் நீதிமன்றம் மேற்கண்ட விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளது.
Home
»
Sri Lanka
»
மூதூர் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
Tuesday, June 6, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment