பாஜக தலைமையிலான மத்திய அரசு தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகின்றது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆட்சியில் இல்லாவிட்டிலும் திமுக இஸ்லாமியர்களுக்காக பெரும்பாடுபாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இப்தார் விருந்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் பாஜக செய்யவில்லை. விவசாயிகள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க மத்திய அரசு மறுக்கிறது. குறைகளை மறைக்கவே மத்திய அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது.
பெரும்பான்மை காரணமாக பாஜக, அதிகார போக்குடன் செயல்படுகிறது. மாட்டிறைச்சி தடை விதித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளன. இதேபோல் தமிழகத்தில் உள்ள ஆட்சி எப்போது மாறும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.” என்றுள்ளார்.
Saturday, June 10, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment