Monday, June 5, 2017

2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ கமல்ஹாசன் எழுத்தில் உருவான படம் "ஆளவந்தான்". தாயம் என்கின்ற புத்தகத்தைத்  தழுவி ஆளவந்தான் கதையை எழுதியிருந்தார் கமல். "வி கிரியேஷன்ஸ்" சார்பில்  'கலைப்புலி' தாணு  தயாரித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, வல்லப் வ்யாஸ், மற்றும் மிலின்ட் குனாஜி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில்  நடித்திருந்தனர்.

"ஆளவந்தான்" திரைப்படம் வணிகரீதியான வெற்றியை பெறவில்லை என்றாலும்  விமர்சகர்களின்  பாராட்டுகளும், தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமாக இருக்கிறதென்ற பெயரும்    இப்படத்திற்கு கிடைத்தது. தற்போது இப்படத்தை மீண்டும் டிஜிட்டலைசேஷன் செய்து வெளியிட இருக்கிறார்கள். இன்று அதற்கான பணி தொடங்கியுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலைசேஷன் செய்து வெளியாக இருக்கும் ஆளவந்தான் திரைப்படம் கிட்டத் திட்ட உலமெங்கும் 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2001 இல்  20 கோடிக்கு படத்தை தயாரித்திருந்தார் எஸ்.தாணு, தற்போது அதன் மதிப்பீடு 400 கோடியென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர்-எசான்- லாய் படத்திற்கு  இசை அமைத்திருந்தனர். ஆளவந்தான் திரைப்படம் தேசிய அளவில் சிறந்த "ஸ்பெஷல் எபக்ட்ஸ்" விருதினைப்  பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer