தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) விரைவில் ஆட்சியமைக்கும் என்று அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
அங்கு அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்காக எப்போதும் தி.மு.க., பாடுபடும். பேரறிஞர் அண்ணா கூறியது போல், வெற்றி, தோல்வியை சமமாக, பாவிப்போம். ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில், தி.மு.க., ஒருபோதும் பின்வாங்காது.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஆட்சி அமைத்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.” என்றுள்ளார்.
Monday, June 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment