Saturday, June 10, 2017

எதிரிகளின் எத்தகைய போர்க்கப்பல்களையும் அழிக்கும் திறன் பெற்ற ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து விட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. புதிய ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து விட்டோம்- வடகொரியா கொக்கரிப்பு சியோல்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் இந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் ஐந்தாவது முறையாக ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக வடகொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கொரிய கிழக்கு பிராந்தியத்தில், வடகொரியா வியாழக்கிழமை அன்று இலக்கை கண்டறிந்து குறி பார்த்து அழிக்கும் ஏவுகணையை பரிசோதித்து உள்ளது. மூன்று நாட்கள் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து நடத்திய கூட்டுப் போர் பயிற்சியில் அமெரிக்காவுக்கு சொந்தமான போர்க் கப்பல்கள் ஈடுபட்டிருந்த நிலையில், வட கொரியாவின் இந்த பரிசோதனை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2015-ல் வட கொரியா பரிசோதனை செய்த போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணைக்கு 100 கிலோ மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 200 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணையை வட கொரியா தற்போது பரிசோதித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட அணு ஆயுத பரிசோதனையை வடகொரியா மீண்டும், மீண்டும் செய்துள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில்,

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுதங்களை தாங்கிய 6,900 டன் எடையுள்ள நீர்மூழ்கி கப்பல் தென் கொரியாவின் பூஷன் துறைமுகத்தை நோக்கி விரைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer