காணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான மறுசீரமைக்கப்பட்ட சட்டமூலம் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாராவது ஒருவர் காணாமற்போனதாக இந்தப் பணியகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டதும், அது தொடர்பான விசாரணைகளையும், நடிவடிக்கைகளையும் பணியகம் முன்னெடுக்கும். அத்துடன், காணாமற்போனவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதுடன், விசாரணைகளின் முடிவில் காணாமற்போனவர்கள் தொடர்பான சான்றிதழையும் இப்பணியகம் வழங்கும்.
இதேவேளை காணாமற்போனவர்களில் உறவினர்களினால் நேற்று புதன்கிழமை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒன்றில் மேற்படி பணியகத்தினை அமைக்கவேண்டாம் என்பதுடன், இச்சட்டமூலத்தினை தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்க்கவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
Thursday, June 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment