நடிகரை முதன்மைப் படுத்தாமல் கதையை நம்பி சூதாடக்கூடியவர் JSK. அந்த சூதாட்டத்தில் வரவும் உண்டு, செலவும் உண்டு, ஏற்றமும் உண்டு, தோல்வியும் உண்டு, காத்திருத்தலும் உண்டு. அவரோடு இணைந்து அந்தக் குழுவும் காத்திருக்கும். ஆனால், அவர்களுக்குள் முரண் வரவே வராது. தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் இல்லாமல் படம் எடுக்கக்கூடிய இயக்குனர்களும் சரி தயாரிப்பாளர்களும் சரி சவால்களை சந்திக்கிறார்கள். அந்த சவால்கள் தாமதத்தைக் கொடுக்கும்; அந்த தாமதம் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே முரண்களை கொடுக்கக்கூடியது.
தரமணி படத்தின் சென்சார் முடிந்தது. தரமணி படத்தில் 17 கட்டுகள் இருக்கும் U/A வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். நான் அதற்கு 17 கட்டுகள் வேண்டாம் A சான்றிதழ் பெற்றுக்கொள்வோம் என்றேன். வேற எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் U/A பெற்றுக்கொள்வோம் திரும்ப satellite-கும் சென்சார் பண்ண வேண்டியது இருக்கும் என்பார்கள். ஆனால், JSK அதை தார்மீகமாக ஏற்றுக்கொண்டார். திட்டத்திட்ட ஒரு சென்சார் நிறுவனத்திடம் சென்று U/A வேண்டாம் 17 கட்டுகள் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்; எங்களுக்கு A சான்றிதழ் கொடுத்துவிடுங்கள் என்று கேட்ட முதல் தயாரிப்பாளரும், இயக்குனரும் நாங்கள்தான் என்று நினைக்கிறேன் என்று இயக்குனர் ராம் குறிப்பிட்டார்.
தரமணி, அண்டாவ காணோம் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சதிஷ்குமார், தரமணி படம் வரும் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment