Thursday, June 29, 2017

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி உத்தரவால் 6 முஸ்லிம் நாடுகளில் இருந்து பொது மக்களோ அகதிகளோ அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப் பட்டது.

இது முஸ்லிம்களைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்ட மிகவும் பாதகமான செயல் என பல தரப்புக்களிடம் இருந்தும் கடும் விமர்சனம் எழுந்தது. மேலும் அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு நடைபெற்று வந்தது. இதன் அடிப்படையில் மிக நெருங்கிய உறவுகளாகக் கருதப்படும் கணவன், மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பெற்றோர் அமெரிக்காவில் வசிப்பதை உறுதிப் படுத்தினால் குறித்த தடை செய்யப் பட்ட நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு வர விசா அளிப்பது சாத்தியம் என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

ஆனாலும் இந்த உறவு முறைகளில் தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள், அத்தை, மாமா, அண்டை வீட்டினர், நண்பர்கள் போன்ற வகைகள் சேர்க்க முடியாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த நிபந்தனைகளை டிரம்பின் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு அமைவாக மாத்திரமே அமெரிக்காவுக்குள் நுழைய விசா அளிக்கப் படக் கூடிய நாடுகளாக விளங்கும் குறித்த 6 முஸ்லிம் நாடுகள் முறையே சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஈரான் மற்றும் யேமென் என்பவை ஆகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer