இதுவரையான மீட்பு பணியில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மீட்பு பணியை தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கமாண்டர் Stuart Cundy தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற பேரனர்த்தம் காரணமாக மேற்கு லண்டன் சோகமயமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இன்று ஏற்பட்ட அனர்த்தத்தின் முக்கிய சில புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக வெளியாகி உள்ளன.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் சிறு குழந்தையின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாடி கட்டடத்தில் 120 வீடுகள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. தீப்பற்றியவுடன் பொலிஸார் மற்றும் தீயணைக்கும் பிரிவினர் அங்கிருந்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வண்டிகள் 40 மற்றும் 200 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
அந்த தீ விபத்து தீவிரவாத செயலாக இருக்கலாம் என இதுவரையில் சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை உரிய முறையில் வெளியாகவில்லை. எனினும் காயமடைந்த 50 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய காலங்களில் லண்டனில் ஏற்பட்ட நான்காம் தாக்குதல் இதுவென குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலைமையின் கீழ் முழு லண்டனும் தீவிரவாத அச்சத்தில் உள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படியிருப்பினும் இந்த சம்பவத்தில் இலங்கையர்களுக்கு இதுவரை பாதிப்புகள் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment