லண்டனில் நேற்று மாலை இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களுடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் மூவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
நேற்று மாலை உள்ளூர் நேரம் மாலை 10 மணியளவில், புகழ்பெற்ற London Bridge இல் வெள்ளை வான் ஒன்று பாதசாரிகள் மீது மோதி தாக்குதல் நடத்தியுடன், அதிலிருந்து போலி தற்கொலைக் குண்டு அங்கிகளுடன் வெளியேறிய மூவர் அருகில் உள்ள மக்கள் சந்தையில் புகுந்து கத்திக் குத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த மூன்று மாதத்தில் பிரித்தானியாவில் இடம்பெற்ற மூன்றாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும். கடந்த மார்ச் மாதம், வெஸ்ட்மினிஸ்டரில் இடம்பெற்ற வாகன மற்றும் கத்திக் குத்து தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மான்செஸ்டர் குண்டுத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sunday, June 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment