இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடத்தின் இறுதியில் 5 வீதமாக உயரும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதகாலப்பகுதியில் 3.8 வீத பொருளாதார வளர்ச்சி வேகம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் 6.2 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதற்குக் காரணம் கொள்கை ரீதியிலான அபிவிருத்தியுடன், வங்கி வட்டி வீதத்தை தொடர்ந்தும் அதே அளவில் முன்னெடுக்கப்பட்டமையே காரணம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுவுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், வரட்சி, வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பொருளாதார வளர்ச்சி வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் தாராள பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டுள்ளது. சேவை துறையில் 3.5 சதவீத பங்களிப்பு பொருளாதாரத்தில் இடம்பெற்றுள்ளது. கைத்தொழில் துறையின் வளர்ச்சி 6.3 சதவீதமாகும். விவசாயத்துறையில் 3.2 சதவீத வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு நாணய கையிருப்பு திருப்திக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ஏற்றுமதி மூலமான வருமானம் 11.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 795 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இருப்பினும் இறக்குமதி செலவு 9.8 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Saturday, June 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment