அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்று அறியப்படும் டிடிவி தினகரனும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் பிணையில் விடுதலையாகினர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிக்கு ரூ.50 கோடி இலஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் டிடிவிதினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
தினகரனுக்கு நேற்று வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கிய தனி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி, ‘தினகரனும், மல்லிகாஜூர்னாவும் ரூ.5 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்லலாம். மேலும் இருவருக்கும் ஜாமீன் முன் மொழியும் 2 பேர் என 4 பேர் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். போலீசார் விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும். வெளி நாடுகளுக்கு எங்கும் செல்லக் கூடாது’ என உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து இன்று ஜாமீன் மனுவை தினகரனின் வழக்கறிஞர்கள் சிறைக்கு கொண்டு சென்று தினகரனை வெளியில் கொண்டு வரும் அனைத்து வேலைகளையும் செய்தனர். இதனையடுத்து டிடிவி. தினகரன், மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஜாமினில் வெளியே வந்தனர். இந்த நிலையில் 38 நாட்கள் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.
Saturday, June 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment