Wednesday, June 21, 2017

மேஷம்: மாலை 4.26 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப்படுத்தும் வகை யில் நடந்துக் கொள்வார். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வாகனம் தொந்தரவு தரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். மாலை 4.26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். வாகன வசதிப் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.

கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிக் கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி: மாலை 4.26 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். அடுத்த வர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவா தங்கள் வந்து போகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் ஆதரவு பெருகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். மாலை 4.26 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப் பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் திருப்பம் ஏற்படும்

0 comments :

Post a Comment

 
Toggle Footer