கொட்டாவையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
29 வயதான தரிந்தி ஆலோக்க அவரது வீட்டின் படுக்கை அறையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்த பெண்ணின் கழுத்து பகுதியின் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் 20க்கும் அதிகமான முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அதிகம் இரத்தம் வெளியேறியுள்ளதாகவும், இதனால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் சந்தேக நபர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் சீ.சீ.டீ.வி கமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில் அந்த காணொளி ஊடாக பொலிஸ் விசாரணை நடத்தப்படவுள்ளது.
சந்தேக நபர் வெளிநாட்டு யாத்திரை பயணங்களை ஏற்பாடு செய்பவர் எனவும், கடந்த 2 வருடங்களாக அவர் அந்த வீட்டிற்கு வந்து செல்பவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நபர் தரிந்தியுடன் காதல் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சித்துள்ள நிலையில் தரிந்தி அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று சந்தேக நபர் அந்த பெண்ணின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
Saturday, June 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment