'ஸ்கெட்ச்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கவிருக்கும் 'சாமி 2' படத்தில் நடிப்பதற்கு விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த படத்தில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். ஷிபு தமீன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் துவங்கவிருக்கும் நிலையில், இதில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பாபி சிம்ஹா, சுசிகணேசன் இயக்கத்தில் ‘திருட்டுப் பயலே-2’, விஜய் தேசிங்கு இயக்கத்தில் ‘வல்லவனுக்கு வல்லவன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில்...‘சாமி-2’ படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொல்லி விட்டதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கும் பாபி சிம்ஹா, சமீபத்தில் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'கருப்பன்' படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment