Thursday, June 29, 2017

இந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்பு தகவல் செயற்கைக் கோளான ஜிசாட் 17 தென்னமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து ஏரியான் 5 ராக்கெட்டு மூலம் வியாழன் அதிகாலை 2:29 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டுள்ளது.

3477 Kg எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் தரையில் இருந்து ஏவப்பட்டு சரியாக 41நிமிடத்தில் விண்ணில் பூமியைச் சுற்றி வரும் விதத்தில் சரியான ஒழுக்கில் நிலை நிறுத்தப் பட்டுள்ளது. ஏரியான் ராக்கெட்டு மூலம் விண்ணில் செலுத்தப் படும் 21 ஆவது செயற்கைக் கோளான ஜிசாட் 17 மாபைல் சேவைகளை விருத்தி செய்யும் அலைக் கற்றைகளை அதிகரிக்க செய்யக் கூடியது என்பதால் இது நாட்டுக்கு மிக அவசியமான செய்மதி என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்கைக் கோளின் ஆயுட் காலம் சுமார் 15 வருடங்கள் எனவும் கணிப்பிடப் பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இஸ்ரோவால் செலுத்தப் படும் 3 ஆவது செயற்கைக் கோளான ஜிசாட் 17 மிக அதிக எடை கொண்ட காரணத்தினால் பிரெஞ்சு கயானாவில் இருந்து செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer