Saturday, June 17, 2017

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று வெள்ளிக் கிழமை முதல் பதற்ற சூழ்நிலை தொடர்கிறது. நேற்று லஷ்கரி இ-தொய்பா அமைப்பின் கிளர்ச்சியாளர்களுக்கும், இந்திய காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்று கிளர்ச்சியாளர்களும், இரு பொதுமக்களும், 8 காவல்துறையினரும், ஒரு இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் கில்காம் மாவட்டத்தின் அர்வானி கிராமத்தில் முதலாவது தாக்குதல்  இடம்பெற்றுள்ளது. லஷ்கரி இ தொய்பா கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்த வீடு ஒன்றின் மீது காஷ்மீர் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில், அந்த அமைப்பின் டாப் கமாண்டர்களில் ஒருவரான ஜுனைத் மடோ மொல்லப்பட்டுள்ளார். லஷ்கர் இ தொய்பா அமைப்பில் புதிதாக இணைந்து அந்த அமைப்புக்கு பலம் சேர்த்தவர் இவர்.

இவர் கொல்லப்பட்டிருப்பதை  இந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இச்சம்பவத்தை அடுத்து காஷ்மீர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் பொதுமக்கள் இந்திய படைமுகாங்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், வன்முறையை அடக்குவதற்காக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது. அங்கு 144 ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதையடுத்து 4 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer