Thursday, June 1, 2017

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். முகப்பொலிவுக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கன்னி: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்: சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்கள். தடைகள் உடைபடும் நாள்.

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கும்பம்: உங்கள் ராசியை சந்திரன் பார்ப்பதால் அழகு, இளமைக் கூடும். சமயோஜிதமாக பேசி சாதிப்பீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குக் கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்: தொட்டது துலங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வி.ஐ.பிகளுடன் இருந்த கருத்துமோதல்கள் சரியாகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். உத்யோகத்தில் அதிகாரி உங்களை பாராட்டுவார். சாதிக்கும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer