டிடிவி.தினகரன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நண்பரும் மல்லிகார்ஜூனாவும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனும், மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டனர். டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜூனாவை மே 15 வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்த டெல்லி போலீசார் டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதனைத் தொடர்ந்து மே 1ந் தேதியான ஞாயிற்றுக்கிழமை தினகரன் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தினகரனை வரும் 15ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்து கோர்ட் உத்தரவிட்டது. போலீஸ் காவலை நீட்டிக்கக் கோரிய டெல்லி போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், வேண்டுமானால் 15ம் தேதிக்குள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தது. தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனாவையும் மே 15 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Monday, May 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment