Monday, May 8, 2017

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் வைத்து ISIS இயக்கத்தின் ஆப்கான் தலைவனான அப்துல் ஹசிப் என்பவர் அமெரிக்க விசேட அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் கடந்த மாதம் கொல்லப் பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கானில் இராணுவ வைத்திய சாலைத் தாக்குதலில் 50 பேர் கொல்லப் பட்டது உட்பட ISIS இன் பல திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கு மூளையாகச் செயற்பட்டவன் என்று கருதப்படும் அப்துல் ஹசிப் கொல்லப் பட்டதை அமெரிக்க மற்றும் ஆப்கான் அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஆப்கானில் செயற்பட்டு வரும் நேட்டோ அமைப்பின் கமாண்டர் ஜெனெரல் ஜோன் நிக்கொல்சன் கூறுகையில் இனிமேலும் தீய எண்ணங்களுடன் ஆப்கானுக்கு காலடி எடுத்து வைக்கும் எந்தவொரு ISIS போராளிகளும் அப்துல் ஹசிப் போன்றே கொல்லப் படுவர் என எச்சரித்துள்ளார்.

மேலும் பெண்டகனின் கணிப்பின் படி ஆப்கானில் இன்னமும் 1000 ISIS போராளிகள் இருக்கலாம் எனத் தெரிய வருகின்றது. மறுபுறம் ஆப்கானில் இன்னமும் 8400 அமெரிக்கத் துருப்புக்களும் 5000 நேட்டோ வீரர்களும் நிலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer