வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாரளுமன்ற பிரதி சேர்மேன் அப்துல் கஃபூர் ஹைடெரி பயணம் செய்த வாகனப் பேரணி மீது ISIS போராளி ஒருவர் நடத்திய தற்கொலைக் குண்டு தாக்குதலில் 25 பேர் பலியானதுடன் 50 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் ஜமியாத் உலேமா ஏ இஸ்லாம் ஃபஸ்ல் கட்சியின் தலைவருமான அப்துல் கஃபூர் ஹைடெரி அதிர்ஷ்ட வசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இவரின் வாகனத்தைக் குறி வைத்துத் தாமே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தினோம் என ISIS இயக்கம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள ஹைடெரி உடல் நலம் தேறி வருவதாக அறிவிக்கப் பட்ட போதும் அவரது கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் பலரும் உயிரிழந்தும் படுகாயமுற்றும் உள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலை பாகிஸ்தான் பரா மிலிட்டரி படை, பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் உட்துறை அமைச்சர் ஆகியோர் கண்டித்துள்ளனர். இதற்கு முன்னதாக இப்பகுதியில் ஷியா சிறுபான்மை மக்கள் மீது தடை செய்யப் பட்டுள்ள லஷ்கர் ஈ ஜாங்க்வி என்ற அமைப்பின் போராளிகளே தாக்குதல் தொடுத்து வந்தனர்.
கடந்த வருடம் பலோசிஸ்தான் மாகாணத்தில் ISIS போராளிகள் தொடுத்த இரு மோசமான தற்கொலைத் தாக்குதல்களில் பல சட்டத் தரணிகள் மற்றும் ஷியா இன முஸ்லிம்கள் என நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment