பாகிஸ்தான் இராணுவமும் அந்நாட்டு உளவுத்துறை அமைப்பான ISI உம் இணைந்து சிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ள (Civil war) முயற்சி செய்து வருகின்றன என அந்நாட்டின் 4 ஆவது மிகப் பெரிய கட்சியான MQM இன் தலைவர் அல்டாஃப் ஹுஸ்ஸைன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதைத் தடுக்க ஐ.நா சபை மற்றும் சர்வதேச சமூகத்தின் தலையீடு தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலண்டனில் தங்கியிருக்கும் ஹுஸ்ஸைன் விடுத்த ஆடியோ செய்தியில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா, சிந்த் மற்றும் பலோசிஸ்தான் போன்ற பகுதிகளை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அந்நாட்டின் பஞ்சாபி இராணுவம் ஆயிரக் கணக்கான அப்பாவி மொஹாஜிர் பலோக்ஸ் மற்றும் பஸ்தூன்ஸ் பூர்விக மக்களைக் கொன்று குவித்தும் உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கராச்சியின் மிகப் பெரிய கட்சியான MQM இன் தலைவர் அல்டாஃப் ஹுஸ்ஸைன் மேலும் தெரிவிக்கையில் உலகின் மிக முக்கியமான தீவிரவாதிகளான ஒசாமா பின்லேடன், முல்லாஹ் ஒமெர் மற்றும் முல்லாஹ் அக்தெர் மன்சூர் ஆகியோரைப் பாதுகாப்பாக பாகிஸ்தானில் பதுங்கி இருக்க உதவி வந்த பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ISI இன் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்தே வருகின்றது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் இராணுவமும் ISI உம் இணைந்து கராச்சி, ஹைடெராபாத் மற்றும் சிந்த் மாகாணத்தின் நகர்ப்புறங்களை ஒரு சிவில் யுத்தத்துக்குத் தள்ளி வருகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் இராணுவம் திட்டமிட்டு செய்து வந்துள்ள ஆப்பரேஷன்களில் 20 000 இற்கும் அதிகமான மொஹாஜிர்ஸ் மக்கள் இதுவரை கொல்லப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1980 களில் மிகப் பெரிய பூர்விகக் கட்சியாக வளர்ந்த MQM, கட்சியின் தலைவர் நாடு கடந்து இலண்டனில் வாழும் காரணத்தாலும் கடந்த வருடம் அவர் பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசியதுடன் தனது ஊழியர்களை மீடியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துமாறு பணித்ததாலும் அக்கட்சி வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
சிந்த் மாகாணத்தை ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ளி வருகின்றது பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI:அல்டாஃப் ஹுஸ்ஸைன்
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment