Friday, May 19, 2017

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சஞ்சிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஐரோப்பிய சந்தை நடைமுறைக்குள் இன்று முதல் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அச் சஞ்சிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொண்டு இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவது குறித்து சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காத்திரமான முன்னேற்றங்கள் வேண்டும்.” என்றுள்ளது.

இலங்கையில் மோசமடைந்திருந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேசத்தை நிராகரித்து வந்ததை அடுத்து, இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2010ஆம் ஆண்டில் இரத்துச் செய்திருந்தது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer