ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகைக்கான இலங்கையின் விண்ணப்பத்தினை ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை பேரவை (வெளிநாடு மற்றும் வர்த்தக அமைச்சர்கள்) அங்கீகரித்துள்ளது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய விடயங்கள் மூன்றை இலங்கை பூத்தி செய்துள்ளதாக தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் பாராளுமன்றம் இந்த விண்ணப்பத்தை ஏற்கனவே அங்கீரித்திருந்தது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பான உத்தியோகபூர்வ நடைமுறையிலான விடயங்கள் அடுத்த வாரத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment