கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதா என்ற FBI புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ரட் குஷ்னர் உட்படுத்தப் பட்டுள்ளார். அண்மையில் இந்த விவகாரத்தை விசாரிக்க அமெரிக்க சட்டத் துறையால் FBI இன் முன்னால் தலைவர் ராபர்ட் முல்லர் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் டிரம்பின் மருமகன் மாத்திரமன்றி தற்போது வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமாகத் தொழிற்பட்டு வரும் குஷ்னர் மீது விசாரணை நடத்தப் படுவதாக அமெரிக்க ஊடகங்கள் பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளன. முக்கியமாக குஷ்னர் ரஷ்யத் தூதர் மற்றும் ரஷ்ய வங்கியாளர்கள் ஆகியோருடன் நடத்திய கலந்துரையாடல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப் பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
35 வயதாகும் குஷ்னர் டிரம்பின் மூத்த மகளான இவன்கா டிரம்பின் கணவர் ஆவார். தற்போது இவர் FBI விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
Home
»
World News
»
அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI விசாரணையில் டிரம்பின் மருமகன்
Saturday, May 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment