அமெரிக்க இராணுவத்தால் கொல்லப் பட்ட அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முன்னால் தலைவன் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா அவரது இறப்புக்குப் பழி வாங்கத் துடிப்பதாக அமெரிக்கத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான 60 நிமிடங்கள் என்ற நிகழ்ச்சியில் முன்னால் FBI ஏஜண்டான அலி ஷௌஃபான் என்பவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பின்லேடனின் மகன் ஹம்சா தனது தந்தையின் வழியிலேயே மேற்கத்தேய நாடுகளை அழிக்கப் போவதாக உறுதியளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் 2011 ஆம் ஆண்டு பின்லேடன் அமெரிக்க நேவி சீல் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட போது அவர் பதுங்கியிருந்த வீட்டில் அவரின் மகன் ஹம்சா எழுதிய கடிதங்கள் கைப்பற்றப் பட்டதன. இக்கடிதங்களில் தான் ஹம்சாவின் சூளுரை பதியப் பட்டிருந்ததாகத் தற்போது கூறப்படுகின்றது. மேலும் இக்கடிதத்தில் கடவுளின் வழியான ஜிகாத் ஐத் தான் கடைப்பிடிப்பேன் பின்லேடனின் அதே பாணியைப் பின்பற்றி மேற்குலகைத் துவம்சம் செய்வேன் என்று எழுதப் பட்டிருப்பதாகவும் இவற்றை எழுதும் போது ஹம்சாவுக்கு 22 வயது இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இக்கடிதத்தில் குறிப்பிடப் பட்ட தகவல்களை வெளிக் கொண்டு வந்த முன்னால் FBI ஏஜண்ட் அலி ஷௌஃபான் அமெரிக்கா மீது தொடுக்கப் பட்ட 9/11 தாக்குதலுக்குப் பின்னர் அல்கொய்தா மீதான FBI இன் முன்னணி விசாரணையாளராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
பின்லேடன் மரணத்துக்குப் பழி வாங்கத் துடிக்கின்றாரா அவர் மகன்? : முன்னால் FBI ஏஜண்ட்
Saturday, May 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment