ஹிலாரி கிளிங்டனின் ஈ மெயில் விவகாரம் மற்றும் டிரம்பின் தேர்தல் வெற்றியில் ரஷ்யாவின் பங்கு ஆகிய விடயங்களில் அமெரிக்க மத்தியப் புலனாய்வு நிலையமான FBI ஐ நடத்தி வந்த விசாரணைகளை தலைமை தாங்கி வந்தவர் அதன் இயக்குனரான ஜேம்ஸ் கோமே ஆவார்.
இவரைப் பதவி நீக்கம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலரும் அமெரிக்கப் பொது மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திடீர் பதவி நீக்கம் தொடர்பில் அதிபர் டிரம்ப் கருத்துத் தெரிவிக்கையில் ஜேம்ஸ் கோமேயினால் புலனாய்வுப் பணிகளைத் திறம்பட வழிநடத்த முடியவில்லை என்றும் இதனால் அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞரான ஜெஃப் செஷன்ஸின் பரிந்துரைக்கு அமைவாகத் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த முடிவினால் அமெரிக்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. ஜேம்ஸ் கோமே சில நாட்களுக்கு முன் கேபிட்டல் ஹில்லில் பகிரங்கமாகவே டிரம்பின் தேர்தல் பிரச்சார வியூகங்களை வடிவமைத்தது ரஷ்யா தான் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment