மாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது
என்றும் இது தொடர்பான சட்டத்தை கேரள அரசு ஏற்காது என்றும் பிரதமர்
நரேந்திர மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்
எழுதியுள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு புதிய சட்டம்
ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது பல இடங்களில் மத்திய அரசை கண்டத்து போராட்டங்கள்
நடைபெற்று வருகின்றன.மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட இந்த தடைக்கு கேரள
முதலமைச்சர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு இது
தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.அதில் மாட்டிறைச்சி தொடர்பான புதிய
விதிமுறைகளால் இறைச்சிக் கூடங்களின் வணிகர்கள் பெரிதும்
பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.இந்த புதிய விதிமுறைகள்
அரசியலமைப்புச் சட்டத்தின் படி மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சிக்கு
எதிரானது என்றும் பினராயி குறிப்பிட்டுள்ளார்.
மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது, ஏழை மக்களுக்கு கிடைக்கும்
ஊட்டச்சத்தை கிடைக்காமல் செய்யும் நடவடிக்கை எனவும் அவர்
தெரிவித்தார்.மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகள் மாநில
உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பினராயி விஜயன்
இந்த சட்டத்தை கேரள அரசு ஏற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனவே மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று
பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment