வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்காவுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர முத்தமிட்டு வாழ்த்துத் தெரிவித்தமையை நாகரீகமற்ற செயல் என்று முன்னாள் இராஜதந்திரியும் கூட்டு எதிரிணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க தன்னுடைய கடமைகளை நேற்று வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இன்றை நிதியமைச்சருமான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்கவுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பிலேயே தயான் ஜயதிலக்க தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குற்றஞ்சாட்டி எழுதியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “உலகின் எந்தவொரு அமைச்சராவது ஆண் அமைச்சர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பாரா? பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறை தெரியாதவர்களே இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றார்கள்.” என்றுள்ளார்.
தயான் ஜயதிலக்கவின் மேற்கண்ட கூற்றுக்கு பலத்த கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Home
»
Sri Lanka
»
ரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்லாட்சிக்காரர்கள் என்று தயான் ஜயதிலக்க குற்றச்சாட்டு!
Saturday, May 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment