தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமையை வைத்துக் கொண்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பஷில் ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருந்தால், அவரினால் இலங்கைத் தேர்தல்களில் போட்டியிட முடியாது போகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Friday, May 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment