Tuesday, May 30, 2017

படப்பிடிப்புக்கு போவதற்கு முன் தலைப்பு. முதல் நாளே அப்படம் சம்பந்தப்பட்ட ஸ்டில்கள் என சிஸ்டமேட்டிக்காக ஒரு படத்தை துவங்கும் பா.ரஞ்சித்திடம், நீங்கள்லாம் கத்துக்கணும் என்று சோஷியல் மீடியாவில் அஜீத் விஜய் இயக்குனர்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறார்கள் திரை ரசிகர்கள்.

ஏனென்றால் இவர்கள் நடிக்கும் படங்கள் எதிலேயும் இந்த விஷயம் நடப்பதேயில்லை.

தலைப்பை கூட படம் வெளியாவதற்கு சில நாட்கள் முன்புதான் சொல்கிற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள் அவ்விருவரும். இது தானாக நடப்பதா, அல்லது அவ்விரு ஹீரோக்கள் சொல்லி நடப்பதா என்கிற டவுட் ஒரு பக்கம் இருக்கட்டும்.

பா.ரஞ்சித் ரஜினி இணையும் அந்த புதிய படத்திற்கு ‘காலா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

காலா என்றால் இந்தியில் கருப்பு என்று அர்த்தமாம். தமிழில் காலா என்றால் எமன் என்றும் அர்த்தம் உண்டு. இப்படியொரு அறச்சொல் பெயரை தலைப்பாக வைத்திருக்கிறார்களே என்கிற அச்சத்தில், “உங்க சம்மதத்தோடதான் இந்த தலைப்பு வைக்கப்பட்டதா?” என்று தனுஷிடம் கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு, தன் ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார் தனுஷ்.

என்னவென்று. “திருப்தி... பரம திருப்தி” என்று! மருமகன் ஒரு தடவ சொன்னா, மாமனார் நூறு தடவ சொன்ன மாதிரி...

0 comments :

Post a Comment

 
Toggle Footer