சிம்பு நடிக்கும் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் அவருக்கு மூன்று ரோல். அதற்கேற்ப மூன்று ஹீரோயின்கள் என்றுதானே எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்? அதில் ஒரு ட்விஸ்ட். இந்தப்படத்தில் அவருக்கு நான்கு ரோல்கள்.
அந்த நான்காவது ரோல் AAA பார்ட் 2 வில்தான் காட்டப்படுமாம். ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் தனித்தனியாக நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறாராம் சிம்பு.
இதற்காக அவர் அதிகம் மெனக்கட்டதாக சொல்கிறார்கள்.
கெட்டப் வேற வேற இருந்தாலும், வடிவேலு மாதிரி குடுமிய மறைக்காம விட்டுட்டனே என்று சிம்பு பீல் பண்ணாத வரைக்கும் நிம்மதி.
ஒருவேளை இந்தப்படம் ஓடினால், கமல் போல 9 கெட்டப்பில் சிம்பு நடிக்கிற காலம் வந்தாலும், தமிழகம் அதிர்ச்சிக்கு ஆளாகாமல் அதை எதிர்கொள்ள வேண்டும்.
இதை கேள்விப்படுகிற ஜனங்களின் நடுக்கம் அது ஒன்றுதான் இப்போதைக்கு.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment