Saturday, May 27, 2017

அஜீத்தின் ‘விவேகம்’, அரைபடாமல் வந்தால் சந்தோஷம்! அந்தளவுக்கு இப்பவே கலவரத்தை கூட்ட ஆரம்பித்துவிட்டது ஒரு குரூப்.

இன்ஸ்ட்ரியில் திடீர் அமைப்பாக கிளம்பியிருக்கும் அது, சில தினங்களுக்கு முன் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனை அழைத்ததாம்.

“தொடரி எடுத்த வகையில் நீங்க பல கோடி விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரங்களுக்கும் தர வேண்டியிருக்கு.

அதை செட்டில் செய்யாம விவேகம் வராது. பஞ்சாயத்து பேசி முடிச்சுரலாம். எப்ப வர்றீங்க?” என்றார்களாம் அந்த அமைப்பின் முதுகு தண்டுகள்.

“அதுக்குதான் தயாரிப்பாளர் சங்கம் இருக்கு. அந்த சங்கத்துல நானே செயற்குழு உறுப்பினரா இருக்கேன். அங்கேயே பேசி முடிச்சுக்குறேன்” என்றாராம் இவர்.

இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களை தூண்டிவிட்டு பல்லாங்குழி ஆடவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறதாம் அந்த அமைப்பு. சினிமாவை வாழ வைப்பாங்கன்னு பார்த்தா, சாக விட்ருவாங்க போலிருக்கே?

0 comments :

Post a Comment

 
Toggle Footer