தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது பேசப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் கொண்டாட்டங்கள் இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கின்றன. அதன் ஆரம்ப நிகழ்வில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். அதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமர், அரச தலைவர்களையும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை இந்தியப் பிரதமர் எதிர்வரும் 12ஆம் திகதி சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போதே, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள்- அரசியல் தீர்வு தொடர்பில் மோடியுடன் பேசப்படும்: சம்பந்தன்
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment