வயிறு காஞ்சுதுன்னா வான்கோழி கூட வைக்கோல் தின்னும்! இந்த பழமொழிக்கு சமீபத்திய எ.கா நம்ம ஸ்ரீதிவ்யாதான்!
ஒரு காலத்தில் தமிழ்சினிமாவில் பிசியோ பிசியாக இருந்தவருக்கு, இப்போது வாய்ப்புகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.
சிவகார்த்திகேயனின் ஃபுல் சப்போர்ட் மெல்ல மெல்ல குறைந்ததால், சம்பளமும் போச். வாய்ப்புகளும் போச்.
இந்த நேரத்தில்தான் அவர் முழுசாக நம்பியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரிலீசுக்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஊர் ஊராக கிளம்பிய படக்குழு, மாவட்டம் தோறும் அமைந்துள்ள முக்கிய தியேட்டர்களில் தரிசனம் கொடுத்தது.
இந்த தரிசன பயணத்திற்காக ஒரு பைசா கூட வாங்காமல் அவர்களுடன் கிளம்பியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
பெரிய பெரிய ஸ்டார் ஓட்டல்கள் இல்லாத ஊர்களில் கூட எளிமையாக தங்கி, இயன்றவரை ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறார். மீண்டும் முதல் வரியை படிக்கவும்!
Monday, May 29, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment